பீகாரில் கங்கை நதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு!

- Advertisement -

வைஷாலி, அக். 14- பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் கங்கை ஆற்றில் நேற்று (13.10.2026) படகு கவிழ்ந்ததில், குழந்தைகள் உட்பட குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். அந்தப் படகில் நடுத்தர அளவிலான சுமார் 25 முதல் 30 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஒரு விருந்தில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வு வைஷாலியின் ராகோபூர் பகுதியில் நிகழ்ந்தது. உயிரிழந்தவர்களில் பெரும் பாலானோர் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகள் குழு ஒன்று விரைந்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள் வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்களும் அப்பகுதியில் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

ஆற்றில் காணாமல் போனவர் களைத் தேடும் பணியில் உள்ளூர் கிராம மக்களும் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் நிர்வாகம் முழு நிலைமையையும் கண்காணித்து வருகிறது.

படகு உரிமையாளர் உட்பட ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் இரவு முழுவதும் தொடரும் என்றும் வைஷாலி மாவட்ட ஆட்சியர் வர்ஷா சிங் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “இதுவரை எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, படகில் சுமார் 15 முதல் 20 பேர் இருந்தனர். அவர்களில், சுமார் 15 வயதுடைய 11 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். படகு உரிமையாளர் உட்பட ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாங்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம், இது இரவு முழுவதும் தொடரும்” என்று கூறினார்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதலமச்சர் சம்ராட் சவுத்ரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “வைஷாலி மாவட்டம், ரகோபூரில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களின் செய்தி, மிகுந்த மனவேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. இந்த இக்கட்டான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும் பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *