பஞ்சாப் எஸ்.அய்.ஆர். பட்டியலில் பகத்சிங்கிற்கும் வாக்காளர் அட்டை கொடுத்த தேர்தல் ஆணையம்

- Advertisement -

லூதியானா, அக்.14 பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் எஸ் அய் ஆர் முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஏற்பட்ட ஒரு குளறுபடி பெரும் அரசியல் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் ஷஹீத் பகத்சிங்கின் ஒளிப்படம் ஒரு சாதாரண வாக்காளரின் பெயருக்கு எதிராக இடம்பெற்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

லூதியானா கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் 38ஆவது பகுதியின் 422ஆம் வரிசை எண்ணில் உள்ள வாக்காளரின் பெயருக்கு எதிராக பகத்சிங்கின் படம் இடம் பெற்றுள் ளதை பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாரிங் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சுட்டிக்காட்டினார்.

இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த லூதியானா மாவட்ட தேர்தல் அதிகாரி, முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்த அதே தவறான ஒளிப்படம் ஆகஸ்ட் 13, 2026 அன்று வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலிலும் தொடர்ந்ததே இதற்குக் காரணம் என்று தெரிவித்தார். சிறப்பு தீவிர திருத்த சரிபார்ப்புப் பணியின் போது இந்தத் தவறு உடனடியாகக் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் தரவு ஒருமைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் தரவுப் பராமரிப்பு முறைகள் குறித்து பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான போராட்டம் நடந்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் எதையும் க்ண்டுகொள் ளாமல் தனது குளறுபடிகளை சரிசெய்யாமல் தவறான வாக்காளர் பட்டியலையே மீண்டும் வெளியிட்டு வருகிறது.

இதன் மூலம் தேர்தல் ஆணையத் திற்கு மக்களின் கோரிக்கைகள் எதுவுமே காதில் விழவில்லை என்பது உறுதியாகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *