குஜராத் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குடியரசுத் தலைவர் ஒப்புதலாம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அக்மதாபாத், அக்.03 சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்ட விதிகளை பின்பற்ற வகைசெய்யும் குஜராத் பொது சிவில் சட்ட மசோதா, கடந்த மார்ச் 24-ஆம் தேதி குஜராத் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். குஜராத் அரசின் அரசிதழில் இதுதொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அரசு முடிவு செய்யும் நாளில், இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. திருமணம், மணமுறிவு வாரி சுரிமை, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் உள்ளிட்ட சிவில் விவகாரங்களை இச்சட்டம் ஒழுங்குபடுத்தும். ஒட்டுமொத்த குஜராத் மக்களுக்கும், வெளிமாநிலங்களில் வசிக்கும் குஜராத் மக்களுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

இருப்பினும், அரசியலமைப்பின் 342-ஆவது பிரிவின்கீழ் வரும் பழங்குடியினருக்கும், அரசியலமைப்பின் 21-ஆவது அட்டவணையில் பாதுகாக்கப் பட்டுள்ள சில குழுக்களுக்கும் இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த 60 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம். ஏற்ெகனவே இந்த சட்டம் உத்தரகாண்டில் அமல்படுத் தப்பட்டுள்ள நிலையில் தற்போது குஜராத்திலும் அமலுக்கு வந்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *