நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு மக்கள் பெரும் அவதி! வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன

2 Min Read

காத்மாண்டு அக். 12- நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு மீண்டும் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் கோர்க்கா மாவட்டத்தில் நேற்று (11.10.2026) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 35-க்கும் மேற்பட்ட வீடுகளும், பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், அங்கு கட்டப்பட்டு வரும் நீர்மின் திட்டப் பகுதியும் பலத்த சேதமடைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் நேபாளத்தில் ஆயிரக்கணக்கானோரின் உயிரைப் பலிகொண்ட பெரும் பேரிடரின் வடுக்கள் முழுமையாக மறையாத நிலையில், தற்போது மீண்டும் அங்கு ஒரு வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது.

குறிப்பாக, திரிசூலி நதியின் கிளை நதியான புதி கண்டகி நதியில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததால், கோர்க்கா மாவட்டத்தின் சும்னுப்ரி கிராமத்தில் பலத்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் 50 பேர் உடனடியாக மீட்கப்பட்டனர். இருப்பினும், குறைந்தது 10 பேர் வரை மாயமாகியுள்ளதாக தெரிகிறது. உயிரிழப்புகள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் இல்லை.

சல்லேரி, பய்யுகா மற்றும் ஜகத் நதிக்கரைப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் தொங்கு பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அங்குள்ள 341 மெகாவாட் புதி கண்டகி நீர்மின் திட்டத்தின் கட்டுமான முகாமும் சில உப கரணங்களும் சேதமடைந்தன. மனாஸ்லு மலையேற்றப் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பலரும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் வழியிலேயே தற்காலிக தங்கு மிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேபாள ராணுவம் தரை மற்றும் வான்வழி மீட்புப் பணிகளில் முழுமையாகக் களமிறக்கப்பட்டுள்ளது. 4 ஹெலி காப்டர்கள் மற்றும் தரைப்படை வீரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சிக்கியவர்கள் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கு கனமழையால் ஏற்படவில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டத் தகவல்கள் மற்றும் செயற்கைக்கோள் படங் களின் அடிப்படையில், நதியின் மேல் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு நதிநீர் தற்காலிகமாகத் தடையாகி, பின் அந்தத் தடை திடீரென உடைந்து பெருக்கெடுத்து ஓடியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *