‘திராவிட மாடல்’ ஆட்சியில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து சாதனை இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

1 Min Read

சென்னை, ஏப்.29 இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:

மகத்தான சாதனை. திராவிட மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது, திராவிட நாயகன் மு.க.ஸ்டாலினின் அரவணைப்பில் வளரும் நம் தமிழ்நாடு!. இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது. இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி. இதில் முக்கிய தகவல் என்னவென்றால், இந்திய அளவில் இது அதிகம் என்பதை கடந்து, ஏற்ெகனவே உயர்ந்து இருக்கும் ஒரு மாநிலம் இவ்வளவு வேகத்தில் வளர்வது உலக அளவிலும் அரிது!

இது சாதாரணமாக கிடைத்த வளர்ச்சி அல்ல. உழைப்பு, உழைப்பு, உழைப்பு! மிகக்கடின உழைப்பினால் கிடைத்த வெற்றி. தி.மு.க. ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான வளர்ச்சி பதிவாகியுள்ளது. தொடர்ந்து 15, 20 ஆண்டுகள் இப்படியான வளர்ச்சி நடந்தால், சீனா, தென் கொரியா போன்ற வளர்ச்சி இங்கேயும் நிச்சயம் சாத்தியம் தான்! 2030க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை உறுதியாக தனது கையில் எடுத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளும் தொடரும். இந்த பாதையை வலுப்படுத்தி, முதலீடு, தொழில், வேலைவாய்ப்பு வளர்ச்சியை முன்னெடுத்து வரும் திராவிட நாயகரின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது! தமிழ்நாடு வளர்கிறது. தமிழ்நாடு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *