சென்னை, அக்.13- போராட் டத்தின் மீதான டில்லி காவல்துறை அடக்குமுறை எமர்ஜென்சியின் கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகிறது என்று எஸ்டிபிஅய் கட்சி தேசிய தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எஸ்டிபிஅய் கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்ட அறிக்கை:
அமைதியான போராட்டத்தின் மீது டில்லி காவல்துறை நடத்திய அடக்குமுறையை எஸ்டிபிஅய் கட்சி வன்மையாக கடுமையாக கண்டிக்கிறது.
பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமையை பறிப்பது ஆகியவை அவசரநிலையின் (எமர்ஜென்சி) கசப்பான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன.
வெளிப்படைத்தன்மையை கோரும் குடிமக்களை அச்சுறுத்த லாகக் கருதும்போது ஜனநாயகத்தால் உயிர்வாழ முடியாது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும், 2023ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையர்கள் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், முன்வைக்கப்படும் எஸ்அய்ஆர் முறைகேடுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும், சட்டவிரோதமான எஸ்அய்ஆர் நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
