மது அருந்துவோரால் ஏற்படும் இடையூறுகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 8 மாநிலத்தில் மது அருந்துவோரால் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு பொது இடங்களில் தகராறு செய்வ தாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அன்றாடம் புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இதனிடையே, சென்னை பெரம் பூர் அருகே தன்னுடைய வீட்டின் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்துபவர்களால் இடையூறு ஏற்படுவதாகவும், மது விற்பது மட்டும் டாஸ்மாக்கின் வேலை அல்ல; மது அருந்துபவர்களால் ஏற்படும் இடை யூறுகளைத் தடுப்பதும் டாஸ்மாக்கின் வேலைதான் என சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்நாதன், வீடுகளின் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது அருந்துபவர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சென்னை வடக்கு காவல் மாவட்டத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது? இதுகுறித்த அறிக்கையைக் காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *