தஞ்சை, அக். 12– தஞ்சையில் தண்டர் விளையாட்டு கழகம் ஒருங்கிணைத்த மாபெரும் சிலம்பம், யோகா, கராத்தே 100ஆம் போட்டிகள் எழுச்சியுடன் நடைபெற்றது.
100 மிதிவண்டிகள் முதல் பரிசாக வழங்கப்பட்டன. தஞ்சை தே.பொய்யா மொழி அவர்களின் தண்டர் விளையாட்டு கழகம் தஞ்சாவூர், திருவையாறு ரோட்டரி சங்கங்கள், பெரியார் வீர விளை யாட்டு கழகம் இணைந்து ஒருங்கி ணைத்த மாபெரும் சிலம்பம், கராத்தே, யோகா போட்டிகள் 2026 அக்டோபர் 10,11 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உள் விளையாட்டு அரங்கத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. அக்டோபர் 10 காலை 9.30 மணிக்கு தொடங்கி சிலம்பம், கராத்தேப் போட்டிகள் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. சிலம்பம் போட்டியில் சுமார் 1000 மாணவர்களும் யோகா போட்டியில் சுமார் 500 மாணவர்கள் என மொத்தம் 1500 மாணவர்களும் பெற்றோர்களும் ஏராளமான பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
ரோட்டரி சங்கங்களின் மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன் சிலம்பம், யோகா போட்டிகளை தொடங்கி வைத்தார். சிலம்பம் யோகா போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மிதிவண்டி கள் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு கோப் பையும் சான்றிதழும் வழங்கப்பட்டன
யோகா சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. ஜெயக்குமார், திருச்சி செழியன் கராத்தே இன்டர்நேஷனல் நிறுவனர் செழியன், திராவிடர் கழக கலைத்துறை செயலாளர்,தனியார் தொடக்கப்பள்ளிகள் கூட்டமைப்பின் மாவட்டடத் தலைவர் ச.சித்தர்த்தன், தண்டர் விளையாட்டுக் கழக நிறுவனர் தே.பொய்யாமொழி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். அக்டோபர் 11 அன்று ஒரு நாள் முழுவதும் கராத்தேப் போட்டி மிக சிறப்புடன் தொடர்ந்து நடைபெற்றன. அனைத்துப் போட்டிகளிலும் பங்குபெறும் மாணவர்களுக்கு 100 மிதிவண்டிகள் முதல் பரிசும், கோப்பை, சான்றிதழ் களும் வழங்கப்பட்டன.
