அன்னவாசல், அக். 12- புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாச லில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அன்னவாசல் ஒன்றியத் தலைவர் இரா.சம்பத் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் ரெ.மு.தர்மராசு அனைவரையும் வரவேற்றார்.
மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.
நிகழ்வில் மேலும் புதுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவர் சு.கண்ணன், மாநகரத் தலைவர் செ.அ.தர்மசேகர், ம.மு.கண்ணன், பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் வீ.மாவலி, பகுத்தறிவாளர் கழகம் எழு. சீனிவாசன், ஆலங்குடி மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ஆறு. பாலச்சந்தர் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அன்ன வாசல் ஒன்றிய கழகம் செய்திருந்தது.
