புதுடில்லி, அக்.12 இந்தியா கூட்டணி சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு உரிய பதில் உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டதுடன், தங்களைச் நேரில் சந்தித்துப் பேச அனுமதி கோரி தலைமை நீதிபதிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களின் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது
கடிதத்திற்கு பதில்
“அவர்களின் கடிதம் நேற்று முன்தினம் (10.10.2026) தேதியிடப்பட்டு அனுப்பப்பட்டது. நான் நேற்று (11.10.2026) வெளியூரில் இருந்ததால் அதனை உடனே பெற முடியவில்லை. ஆனால், நேற்று இரவே அதற்கான பதிலை அனுப்பிவிட்டேன்” என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திப்பதில் உள்ள இயலாமைக்கான காரணங்கள் குறித்து அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடிதத்தின் இரகசியத் தன்மையைப் பேணும் வகையில் அதன் முழு உள்ளடக்கத்தை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு ஊடக வியலாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
அனைவருக்கும் திறந்திருக்கும் நீதித்துறை
“உச்ச நீதிமன்றத்தின் கதவுகள் நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் எப்போதும் திறந்திருக்கின்றன. சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் மனுத் தாக்கல் செய்ய உரிமை உண்டு” என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா கூட்டணி எழுப்பிய கவலைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்துச் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும், தகுதியுள்ளவர்கள் உரிய நிவாரணங்களைப் பெறுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.
