உக்ரைன் மீது ரஷ்யா நள்ளிரவு தாக்குதல்: 19 பேர் உயிரிப்பு, 60 பேர் காயம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கீவ், அக். 9- உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய தீவிர டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.

கீவ் நகரின் மீது 6.10.2026 அன்று இரவு தொடங்கிய இந்தத் தாக்குதல் 8.10.2026 அன்று அதிகாலை வரை நீடித்தது. குறிப்பாக, போடில்ஸ்கி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு அல்லாத கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் அமைந்துள்ள வாகனப் பழுதுபார்ப்பு நிலையமும் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி தீப்பற்றியது. மேலும், ஒபுகிவ் மாவட்டத்தில் மூன்று முக்கிய உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்தன.

தலைநகர் கீவ் உட்பட உக்ரைனின் 12க்கும் மேற்பட்ட பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் இந்த வான்வழித் தாக்குதலைத் தொடுத்துள்ளன. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களின் விவரங்களை உக்ரைன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்ச்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *