2026ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஸ்டாக்ஹோம் அக். 08- நூற்றாண்டு பழமையான வேதியியல் புதிருக்கு தீர்வுகண்ட பிரான்சு மற்றும் ஜப்பானை சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.   வேதியியலுக்கான நோபல் பரிசு நேற்று (7.10.2026) அறிவிக்கப்பட்டது.

நேரியல் அல்லாத விளைவுகள், தன்வினை யூக்கம் ஆகியவற்றை கண்டறிந்ததற்காக பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஹென்றி பி. காகன், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கென்சோ சோய் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேதியியலுக்கான நோபல் குழுவின் தலைவர் ஹெய்னர் லிங்கே கூறும்போது, “இந்த ஆண்டுக்கான பரிசு அடிப்படை வேதியியலுக்கானது. அமினோ அமிலங்கள் போன்ற சில மூலக்கூறுகள், ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பங்களாக இருக்கும் இரண்டு வகைகளாக உள்ளன. இருப்பினும், உயிரி மூலக்கூறுகள் இந்த கண்ணாடி பிம்பங்களில் ஒன்றை மட்டுமே கொண்டுள்ளன.

இதுபோன்ற வேதியியல் சமச்சீரின்மை எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்பது வேதியியலாளர்களுக்கு நீண்ட காலமாக ஒரு புதிராகவே இருந்து வந்தது. நூற்றாண்டு பழைமையான இந்தப் புதிருக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்ததற்காக ஹென்றி பி. காகன் மற்றும் கென்சோ சோய் ஆகியோருக்கு 2026-ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது” என்றார்.

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு குறித்து ஹெய்னர் லிங்கே கூறியதாவது: நமது இடது மற்றும் வலது கைகளைப் போலவே, சில மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று கண்ணாடி பிம்பங்களாக இருக்கும் இரண்டு வடிவங்களில் காணப்படுகின்றன. அவற்றில் ஒரே மாதிரியான அணுக்கள் ஒரே விதமாக இணைந்திருந்தாலும், அவற்றின் தன்மை வேறுபட்டவை. இந்த வேறுபாடு உயிரியலில் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

புரதங்களின் கட்டுமானக் கூறுகளான அமினோ அமிலங்கள் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவை ஒன்றுக்கொன்று எதிரெதிரான இரண்டு வடிவங்களில் இருக்க முடியும். ஆனால் உயிரினங்கள் புரதங்களை உருவாக்க அவற்றுள் ஒன்றை மட்டுமே பெருமளவில் பயன்படுத்துகின்றன. இது, உயிர் எப்படி ஒரு மூலக்கூறு வடிவத்தை மற்றொன்றை விடத் தேர்ந்தெடுத்தது? என்கிற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

வேதிவினைகள் எப்போதும் ஒரு முழுமையான சமநிலையில் நிகழ வேண்டியதில்லை என்பதை அவருடைய ஆய்வு காட்டியது. அதன்பிறகு கென்சோ சோய் 1995-இல், ஒரு மூலக்கூறின் ஒருபக்கச் சாய்வை பெருக்கும் ஆற்றல் கொண்ட ஒரு வேதிவினையை அறிவித்தார். அந்த வினையானது தன்வினையூக்கத்தை உள்ளடக்கியிருந்தது.

2003-ல், சாத்தியமான இரண்டு கண்ணாடி பிம்ப வடிவங்களில் அடிப்படையில் ஒன்றை மட்டுமே உருவாக்கும் ஒரு வினையை கென்சோ சோய் செய்து காட்டினார். இது ஒரு மைல்கல் சாதனையாகும், ஏனெனில் உயிரியல் அமைப்புகளைத் தவிர, வேறு எந்த விஞ்ஞானிகளாலும் இதற்கு முன்பு இத்தகைய உயர் அளவிலான வேதியியல் திசைச்சார்பை தன்னிச்சையாக அடைய முடிந்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *