சிலைக் கடத்தல் வழக்குகள்: தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக். 8- தமிழ்நாட்டில் சிலை திருட்டு வழக்குகளின் விசா​ரணை நிலை மற்​றும் எடுக்​கப்​பட்ட நடவடிக்கைகள் குறித்து விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிலைக் கடத்​தல் மற்​றும் வழக்​கின் கோப்​பு​கள் காணாமல்போன விவகாரம் தொடர்​பாக விசா​ரணை நடத்த சிறப்​புப் புலனாய்வுக்குழு அமைக்​கக்​கோரி வழக்​குரைஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்​முறை​யீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்​தில் நீதிப​தி​கள் பி.​வி.​நாகரத்​னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் யானை ராஜேந்​திரன் தரப்​பில் வழக்​குரைஞர் பி.​வி.யோகேஷ்வரன் ஆஜராகி, சிலைக் கடத்​தல் வழக்​கின் 41 ஆவணங்​கள் காணாமல் போயின, இதில் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. அது​போல, திருடப்​பட்ட பழைமையான சிலைகள் அமெரிக்​கா, இங்​கிலாந்து நாடு​களில் உள்ளன. அதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட​வில்​லை என்றார்.

அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் பி.கருணாகரன், “சிலைத் திருட்டு வழக்கை கையாள சிறப்பு ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, இதுகுறித்த தகவல்​களை விரிவான அறிக்​கை​யாக தாக்​கல் செய்ய 4 வார அவகாசம் வேண்டும்” என்றார்.

இதனிடையே, ஒன்றிய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் கே.எம்​.நட்​ராஜ் ஆஜராகி, சிலைக் கடத்​தல் விவ​காரம் பல மாநிலங்களில் பேருரு எடுத்​துள்​ள​தாக​வும், வெளிநாடுகளுக்குக் கடத்​தப்​பட்ட சிலைகளை மீட்​ப​தற்​கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதைத்​தொடர்ந்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு வருமாறு:

தமிழ்நாட்டில் சிலை திருட்டு வழக்​கில் எடுக்​கப்​பட்​டுள்ள நடவடிக்கை மற்​றும் சிலைத் திருட்டு வழக்​கின் ஆவணங்​கள் காணாமல்போன விவகாரத்​தில் எடுக்​கப்​படுள்ள நடவடிக்கை குறித்து விரி​வான அறிக்​கையை தமிழ்நாடு அரசு தாக்​கல் செய்ய வேண்​டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வி​சா​ரணை​யை நவ.4 ஆம்​ தேதிக்​குத்​ தள்​ளிவைத்​தனர்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *