சென்னை, அக். 07- தமிழ்நாட் டில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடங்க அரசு கல்லூரி ஆசிரி யர் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகப் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை வேளச்சேரியில், மேற்கு ஆஸ்தி ரேலியா பல்கலைக்கழகம் (University of Western Australia) என்ற பெயரில் முதல் வெளிநாட்டுப் பல் கலைக்கழகம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5-ஆம் தேதி யுஜிசி தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளதாக அப் பல்கலைக் கழகத்தின் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசும் இப் பல்கலைக்கழகத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அப்பல்கலைக் கழகத்தில், இளநிலை பாடப் பிரிவுகளான பிசினஸ் மேனேஜ் மென்ட், டேட்டா சயின்ஸ் முத லாமாண்டு கல்விக்கட்டணம் மட்டும் தலா ரூ.14.52 லட்சம் என்றும், ஏ.அய். பாடப்பிரிவுக்கு 17.93 லட்சம், எம்பிஏ படிப்புக்கு 23.10 லட்சம் என்றும், அதன் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்ற தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் ஒரு அம்சம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அரியானா, கருநாடகா, மகாராட்டிராவுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் வெளி நாட்டு பல்கலைக்கழகம் தொடங்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, தனியார் பல்கலைக் கழகங்கள் அதிக அளவில் தொடங்குவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக அரசு, தற்போது வெளிநாட்டு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும் அனுமதி அளித்துள்ளது.
மிகக் குறைந்த கட்டணத்தில் சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயிலும், தமிழ் நாட்டின் 21 பல்கலைக் கழகங்களில் பாதிக்கு மேல் நிரந்தர ஆசிரியர்கள் இல்லை. உதாரணத்துக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் 515 ஆசிரியர் களுக்கு 180 பேர், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தித்தில் 405 ஆசிரியர்களுக்கு 202 பேர், திருச்சி பாரதிதாசன் பல்கலக்கழகத்தில் 230 ஆசிரியர்களுக்கு 119 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
மேலும், 188 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 7198 காலியிடங்கள் உள்ளதாக தமிழ்நாடு அரசின் அதிகாரப் பூர்வ புள்ளி விவரம் குறிப்பிடுகிறது. பத்தாண்டு களுக்கும் மேலாக அரசு பல் கலைக்கழகங்களிலும், அரசு கல்லூரிகளிலும் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாமல், ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் 90 சதவீதமான ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி பயிலும் அரசு பல்கலைக் கழகங்களிலும், அரசு கல்லூரி களிலும் அடிப்படை கட்டமைப் புகளை ஏற்படுத்தாமல், இக்கல்வி நிலையங்களில் பெரும்பான்மை யான ஆசிரியர் பணியிடங்களை பத்தாண்டுகளாக நிரப்பாமல், வெளிநாட்டு பல்கலைக் கழகத்தை தமிழ்நாட்டில் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழ்நாடுஅரசின் உயர்கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு எதிரானதாகும். தமிழ் நாட்டின் சமூக நீதி பாரம்பரியத்தில் பற்று கொண்டுள்ள அனைவரும், தமிழ்நாட்டில் வெளி நாட்டு பல் கலைக்கழகங்கள் அமைவதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தி யுள்ளார்.
