இதுதான் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சாதனையோ! வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டி அதிரடியாக உயர்வு – ரிசர்வு வங்கி அறிவிப்பு!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மும்பை அக். 8-  வங்கிகளுக்கான   வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% உயர்த்தி உள்​ளதால் வீடு, வாக​னம், தனி​நபர் கடன் வட்டி உயரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அமெரிக்​கா – ஈரான் போர் காரண​மாக கச்சா எண்​ணெய் விலை உயர்ந்​த​தால், பணவீக்​கம் உயர்ந்து ரூபாய் மதிப்​பும் சரிந்து வருகிறது. இந்நிலையில், ரிசர்வ் வங்​கி​யின் நிதிக் கொள்​கைக் குழு கூட்​டம் ஆளுநர் சஞ்​சய் மல்​ஹோத்ரா தலை​மை​யில் மும்பையில் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில், வங்​கி​களுக்கு வழங்​கப்​படும் குறுகியகால கடன் மீதான (ரெப்​போ) வட்டி விகிதத்தை 5.25-லிருந்து 5.5 சதவீத​மாக உயர்த்த ஒரு​மன​தாக முடிவு செய்​யப்​பட்​டது. கடைசி​யாக கடந்த 2023 ஆம் ஆண்டு வட்டி உயர்த்​தப்​பட்​டது. மூன்​றரை ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

இக்கூட்​டத்​துக்​குப் பிறகு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்​சய் மல்​ஹோத்ரா கூறும்போது,

‘‘ரெப்போ விகிதத்தை 0.25% உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. பன்னாட்டளவில் பணவீக்​கம் மேலும் அதி​கரிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது. வர்த்தக நிச்​சயமற்ற தன்மை தொடர்ந்து நீடிக்​கிறது. உலகளா​விய சூழல் பலவீனமாகவே உள்​ளது. போரின் தாக்​க​மும், வர்த்​தகம் மற்​றும் விநி​யோகச் சங்​கி​லிகளைச் சீர்​குலைக்​கக்​கூடும்.

இருப்​பினும், இந்​தி​யப் பொருளா​தா​ரம் வலு​வாக இருக்​கிறது. நடப்பு நிதி​யாண்​டில் நம் நாட்​டின் பணவீக்​கம் 4.4 ஆக இருக்​கும் என கணிக்கப்​பட்​டுள்​ளது” என்​றார். இந்த வட்டி உயர்வு காரணமாக, வீடு, வாக​னம், தனி​நபர் கடன்​கள் மீதான வட்டி விகிதத்தை வங்​கி​கள்​ உயர்த்தும்​ என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *