பெல்ஜியம் அறிவியலாளர் பிரான்சிஸ் ஹேல்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஸ்டாக்ஹோம், அக். 07- இயற் பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜி யத்தைச் சேர்ந்த அறிவியலாளர் பிரான்சிஸ் ஹேல்சனுக்கு அறிவிக் கப்பட்டுள்ளது. அய்ஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு முக்கியப் பங்களிப்புகளை வழங்கிய தற்காக பிரான்சிஸ் ஹேல்சன் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

சுவீடனைச் சேர்ந்த அறிவியலாளர் ஆல்பிரட் நோபல் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக செயல் பட்டவர்களுக்கும், அமைதிக்காக பாடுபட்ட வருக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று (6.10.2026) அறிவிக்கப்பட்டது. இதன்படி, அமெரிக்காவின் விஸ் கான்சினில் உள்ள மேடிசன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் அறிவியலாளராக பணியாற்றும் பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஹேல்சனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அய்ஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவும் மற்றும் வானியல் தோற்றம் கொண்ட உயர் ஆற்றல் நியூட்ரினோக்களைக் கண்டுபிடித்ததற்காகவும் 82 வயதான பிரான்சிஸ் ஹேல்சன் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹேல்சனின் யோசனையில் உருவான அய்ஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகம், தொலைதூர அண்டத்தில் தோன்றும் நியூட்ரினோக்களைக் கண்காணிக்கிறது. இந்த அய்ஸ்கியூப் ஆய்வகத்தால் தொடர்ந்து பதிவு செய்யப்படும் நியூட்ரினோ தொடர்பான நிகழ்வுகள், உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோக்கள் உருவாக்கப்படக்கூடிய வன்முறைச் சூழல்கள் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுத்தொகை 1 கோடியே 20 லட்சம் சுவீடன் பணம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.55 கோடி) ஆகும். இந்த பரிசு வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *