துருக்கியில் இருந்து கமுக்கமாக வெளியேறிய விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

சிறப்பு புத்தக சலுகைகள்

வாசிங்டன், ஆக. 13- துருக்கியில் கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து பிறருக்குத் தெரியாமல் வெளியேற்றப்பட்டார். ஈரான் விடுத்த மிரட்டல் காரணமாக, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் அவரை மற்றொரு விமானத்திற்கு மாற்றியதாக டிரம்ப் தெரிவித்தார். அவர் விமான நிலைய உணவு கொண்டு செல்லும் வாகனத்தில் மறைந்து சென்று வேறு விமானத்தில் ஏறினார்.

டிரம்ப் சென்ற ஏர் போர்ஸ் ஒன் விமானம் ஒரு போலியான இலக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த கமுக்கமான நடவடிக்கையை டிரம்ப் தற்போது ஒப்புக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கமுக்கமாகப் பயணிக்கும் முடிவு பாதுகாப்பு பிரிவின் முடிவே ஆகும்.

இருப்பினும் தனக்கு வரும் அச்சுறுத்தல்கள் பயத்தை ஏற்படுத்த வில்லை” என்றார். அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு பயணங்கள் வழக்கமானவை என்றாலும், டிரம்ப்பின் இந்த கமுக்க நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாமல் ஈரான் அச்சுறுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *