“எங்களை கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை” என்ற மமதையில் நடந்து கொள்கிறார்களா? தி.மு.க. எம்.பி. கனிமொழி கேள்வி

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

கோவில்பட்டி, அக். 7- தேர்தலுக்கு முன்பு அள்ளித் தெளித்த வாக்குறுதிகளை, தவெக அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கீழஈராலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (6.10.2026) கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் விஜய் வாக்குறுதி களை அள்ளி வீசினார். ஆனால், விவசாயிகள், உழைக்கும் மக்கள், செவிலியர்கள் என யாருக்கெல்லாம் வாக்குறுதிகளை கொடுத்தார்களோ, தேர்தலுக்குப் பிறகு அவற்றை அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. தங்களுடைய நியாயத்துக்காக போராடும் செவிலியர்களை கைது செய்திருக்கின்றனர். அத்துடன் கன்னியாகுமரி மாவட்ட திமுக செயலாளர் மனோ தங்கராஜையும் இந்த அரசு கைது செய்து அடைத்து வைத்திருந்தது. இரவில்தான் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், செவிலியர்களின் கோரிக்கைகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், எங்களை கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லை என்ற மமதையில் நடந்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் கொலை நிகழ்வுகள், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதை இந்த அரசு சரி செய்வதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *