வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.209 வரை குறைப்பு! வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சேலம், ஆக.2- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு உருளைகளின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது.

குறிப்பாக, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டு, ஜூன் 1ஆம் தேதி வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.990 முதல் ரூ.1000 வரை உயர்ந்தது. அதே மாதத்தில் 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையும் ரூ.29 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மாதம் வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.172.50 முதல் ரூ.177 வரை குறைந்த நிலையில், கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 20 சதவீதம் வரை உயர்ந்ததால், நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் எரிவாயு உருளை விலை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.

எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி:

வர்த்தக எரிவாயு உருளை (19 கிலோ): எதிர்பாராத விதமாக நாடு முழுவதும் ரூ.192 முதல் ரூ.209 வரை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.200 குறைக்கப்பட்டு, கடந்த மாதம் ரூ.3,106-க்கு விநியோகம் செய்யப்பட்ட எரிவாயு உருளை தற்போது ரூ.2,906 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக எரிவாயு உருளை (14 கிலோ): தொடர்ந்து இரண்டாவது மாதமாக இதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் கடந்த ஜூன் மாத விலையே தற்போதும் நீடிக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *