திருவனந்தபுரம், அக்.6 மலேசியப் பொறியாளர் லீ சீ பின் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட வழக்கு, தலை மைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக நடவடிக்கை எடுக்க கேரள அர சுக்கு அம்மாநில சட்டத்துறை ஆலோசனை அளித்துள்ளது.
ஞானேஷ் குமார் கேரள மாநிலப் பொதுப்பணித் துறைச் செயலா ளராகப் பணியாற்றிய காலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முய்யச் (எம்.சி.ரோடு) சாலை மறுசீரமைப்புத் திட்டத்தின் முன்னாள் தலைமை அதிகாரியும், மலேசியப் பொறியாளருமான லீ சீ பீன், அரசு அதிகாரிகள், பொதுப்பணித் துறையினரின் துன்புறுத்தலையும், பணப்பட்டு வாடாவில் ஏற்பட்ட தாமதத்தையும் காரணமாகக் குறிப்பிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
உலக வங்கியின் நிதியுதவியுடன் நடந்த இத்திட்டத்தை, மலேசி யாவின் ‘பட்டி’, கொச்சியைச் சேர்ந்த ‘பகீரதா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ (Bhageeratha Constructions) ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ‘பட்டி-பெல்’ கூட்டு நிறுவனம் செயல்படுத்தியது. இந்தக் கூட்டு முயற்சி நிறுவனம், 127 கி.மீ நீளமுள்ள முக்கிய மய்யச் சாலைப் பகுதியை 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைப்பதாக இருந்தது. நிதி, ஒப்பந்தத் தொகையை உரிய நேரத்தில் விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை அந் நிறுவனத்தைச் சிக்கலில் தள்ளியதாகவும், இறுதி யில் பீன் தற்கொலை முடிவை எடுக்கத் தூண்டியதாகவும் கூறப்படுகிறது. அவர் இரண்டு தற்கொலைக் கடிதங்களை எழுதி வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக, ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்தச் சட்டத் தடையும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் பிரிவின் தலைமை இயக்குநர் டி.ஆசாஃப் அலி மாநில அரசுக்குச் சட்ட ஆலோசனை வழங்கியுள்ளார். அக் குறிப்பின்படி, ‘‘ஞானேஷ் குமாரால் தனக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தலால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலின் காரணமாகவே பீன் தற்கொலை செய்துகொண்டார் என்பது இறந்தவரின் தற்கொலைக் கடிதத்திலிருந்து தெளிவாகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
