டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* என்.சி.இ.ஆர்.டி. 9-ஆம் வகுப்பு பாடநூலில் கோயில்கள்: என்.சி.இ.ஆர்.டி. 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் கோயில்கள் மத மய்யங்களாக மட்டுமல்லாமல், பொருளாதாரம், நில நிர்வாகம் மற்றும் சமூக வாழ்வில் முக்கியப் பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
* ஒரே நாடு, ஒரே தேர்தல் – கபில் சிபல் எதிர்ப்பு: நாடாளுமன்றக் குழு உச்சநீதிமன்றத்தை சந்திப்பது நீதித்துறை சுதந்திரத்தையும் அதிகாரப் பிரிவினையையும் பாதிக்கலாம் என கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மசோதாக்கள் நீதித்துறையின் அதிகார வரம்புடன் தொடர்புடையதால், இச்சந்திப்பு அரசியலமைப்புச் சிக்கலை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஞானேஷ் குமாருக்கு எதிராக ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம்: வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன.
தி இந்து:
* உள்ளாட்சித் தேர்தலில் 34% BC இட ஒதுக்கீட்டை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து செய்தது: 50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை மீறுவதாக கூறி நீதிமன்றம் உத்தரவு; ஆறு வாரங்களுக்குள் தேர்தல் பணிகளை தொடங்க மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவு. (உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக, 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பு மீறாதா?)
– குடந்தை கருணா
