கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.9.2026

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* தேர்தல் ஆணையம் குறித்து முன்னாள் உள்துறைச் செயலாளர்: முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், எஸ்.அய்.ஆர் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் சட்டவிரோதச் செயல்கள் நடந்ததாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றம்சாட்டி, கிரிமினல் வழக்கு பதிவு செய்து புதிய தேர்தல் நடத்தக் கோரியுள்ளார். வாக்காளர் நீக்கங்களில் நிலுவையில் உள்ள மேல் முறையீடுகளை பரிசீலிக்காமல் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* காங்கிரஸ் செயற்குழு (CWC), பிரதமர் மோடி பதவி விலகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, எஸ்.அய்.ஆரை நிறுத்தி 13.3 கோடி வாக்காளர் பெயர்களை மீண்டும் சேர்க்கக் கோரியுள்ளது; தேர்தல் முறை கேடுகள் குறித்து விசாரணை நடத்தவும் கேட்டுள்ளது.

* எஸ்.அய்.ஆர் தொடர்பான வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையரை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க ஒப்புக்கொண்ட நிலையில், தெலங்கானாவில் 40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக முதலமைச்சர் ரேவந்த் கூறியுள்ளார்;

* உயர்கல்வி மாணவர்களில் மன அழுத்தம்: உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 15% மாணவர்கள் கடந்த ஆறு மாதங்களில் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வை அனுபவித்ததாக உச்சநீதிமன்றம் நியமித்த குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்கொலை எண்ணங்கள் குறித்த கவலையும் ஆய்வில் வெளிப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் மனநலம் பிரச்சினைகளைத் தீர்க்க தேசிய பணிக்குழு நடவடிக்கை எடுக்க உள்ளது.

* என்.சி.இ.ஆர்.டி.(NCERT) பாடப்புத்தகத்தில் மத நோக்கங்கள்: என்.சி.இ.ஆர்.டி.யின் புதிய 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்திய வரலாற்றின் தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் அவற்றின் எல்லைகள் விரிவாக்கம், மத நோக்கங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பாடப் புத்தகம் மாணவர்களுக்கு இந்திய வரலாற்றை புதிய கோணத்தில் விளக்குவதாகவும், மத நோக்கங்கள் தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எஸ்.அய்.ஆர் குறித்து இண்டியா கூட்டணி ஆலோசனை: கூட்டுப் போராட்டம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை நீக்கக் கோரும் பதவி நீக்க நோட்டீசு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. திமுக, ஆம் ஆத்மி கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், பதவி நீக்க நோட்டீசுக்கு ஆதரவு அளிக்கும்; அகிலேஷ் தான் பங்கேற்காமல் பிரதிநிதிகளை அனுப்புகிறார்.

தி இந்து:

* ஜெம் வீரமணி வழக்கில் முதலமைச்சர் மற்றும் இரு அமைச்சர்களை எஸ்.அய்.டி. விசாரிக்க வேண்டும் – திமுக மனு: போக்சோ வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெம் ஆர். வீரமணிக்கு ஆதரவாக செயல் பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த திமுக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

* கல்வியில் ஆர்.எஸ்.எஸ். திட்டத்திற்கு எதிராக ‘செயல் பட காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் திட்டம்’: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். கல்வித் துறையில் ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைத் தாக்கத்தை எதிர்கொள்ள மாநில அளவில் செயல் திட்டம் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

* எஸ்.அய்.ஆர் மூலம் ‘சவர்ண ஹிந்து ராஷ்டிரம்’ உருவாக்க முயற்சி – பரகால பிரபாகர்: வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ள எஸ்.அய்.ஆர் நடவடிக்கை, இந்தியாவை “சவர்ண இந்து ராஷ்டிரமாக” மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதாக குற்றச்சாட்டு. எஸ்.அய்.ஆரை வெறும் தேர்தல் பிரச்சினையாக பார்க்காமல், அதன் அடிப்படை நோக்கத்தையே எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

தி டெலிகிராப்:

* மக்கள் தொகை விவரங்கள் குறித்து காங்கிரஸ் எதிர்ப்பு: ஒன்றிய அரசின் மக்கள் தொகை குழு, பிறப்பு, பள்ளிச் சேர்க்கை, சொத்து பரிவர்த்தனை, வாகனப் பதிவு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 15 ஆண்டுகால மதவாரியான தரவுகளை மாநிலங்களிடம் கோரியுள்ளது. இந்த நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “சிவன் ஏழைகளின் கடவுள்; ராமன் பணக்காரர்களின் கடவுள்”: ராமன்–சிவன் குறித்த தெலங்கானா முதல மைச்சர் ரேவந்த்யின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு: வட இந்திய தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை விமர்சித்த ரேவந்த், “பகவான் ராமனை பாஜக கைப் பற்றிவிட்டது” என விமர்சனம். காங்கிரஸ் ஆதரவு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *