பழனி, அக். 2- பழனி கழக மாவட்டம் புது ஆயக்குடியில் 26.9.2026 அன்று மாலை 6 மணிக்கு அறிவாசான் தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா பொதுக் கூட் டம் ஆயக்குடி கிளைத் தலைவர் க.நாக ராசு தலை மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட இணைச் செயலாளர் ஆ.இராம கிருட்டினன், மாவட்டத் தொழிலாளரணித் தலைவர் பெ.இரணியன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் தொடக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளரும், கழக சொற்பொழிவாளருமான தேவ.நர்மதா அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் குறித்து அனைவரும் பாராட்டும் வண்ணம் சிறப்புரையாற்றினார். மேலும் கூட்டத் தொடக்கத்தில் பழனி சு.அழகர்சாமி மந்திரமா? தந்திரமா? என்னும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி செய்து காட்டினார்.
இக்கூட்டத்தில் இல.சித்திரசேனன், சா.பாலகிருட்டிணன், பழனி ராஜா, ஜெகதீஸ் வரன் உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக குண.அறிவழகன் நன்றியுரையாற்றினார்.
