மேட்டுப்பாளையம் பெரியார் விளையாட்டுக்குழு, குட்டைப் புதூர் சிவகாமி விளையாட்டுக்குழு சார்பாக 7 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் வட்டார அளவிலான கபாடி போட்டி மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குட்டைப் புதூரில் காலை 9 மணிக்கு துவங்கியது. மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் நாராயணன் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.பிரதீப் முன்னிலையில் துவக்க விழா நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் சு.வேலுச்சாமி மற்றும் மாவட்டச் செயலாளர் கா.சு.அரங்கசாமி ஆகியோர் முதல் போட்டியை துவக்கி வைத்தனர். மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் மு.வீரமணி, தேக்கம்பட்டி வெள்ளியங்கிரி மற்றும் தோழர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
