உயர் நீதிமன்றமும், மாநில அரசும் ஆணை பிறப்பித்த பிறகும் இன்னும் தெருக்களில் ஜாதிப் பெயரா? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 02- தெருக்கள், சாலைகளில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிணை கோரிய ஒரு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையை ஜாதிப் பெயருடன் தெரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததை, சுட்டிக்காட்டிய நீதிபதி என்.ரமேஷ், ‘தெருக்கள், சாலைகளில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசு மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்தும் தெருக்களின் பெயரில் ஜாதிப் பெயர்கள் இன்னும் இடம்பெற்றுள்ளது.

தெரு பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மா திகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தெருக்கள், சாலைகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய் துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர் பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 6-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *