பகல் கொள்ளை என்பது இதுதானோ? மருந்துகள் விற்பனை விலை உற்பத்தியைவிட 10 மடங்கு அதிகம் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, அக்.1 புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக் கான அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தி விலைக்கும், அதிகபட்ச சில்லரை விலைக்கும் (MRP) இடையே 10 மடங்குக்கும் அதிக மான இடைவெளி இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்குரை ஞர் கிஷன் சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:

பகல் கொள்ளை

‘எக்ஸ்ம்பிடியா 20 எம்ஜி’ ஊசியின் அடக்க விலை வெறும் 3,520 ரூபாயாக உள்ள நிலையில், அதன் மீது அச்சிடப்பட்டுள்ள சில்லரை விலை 22,437 ரூபாயாக விற்கப்படுவது பகல் கொள்ளையாகும்.

வழக்கமான மருந்தகங்களில் சிறு தள்ளுபடிகள் கிடைக்கும் நிலையில், கார்ப்பரேட் மருத்துவ மனைகள் முழு சில்லரை விலையை நிர்ணயித்து மருத்துவப் பய னாளிகளிடம் வசூலிக்கின்றன.

மக்களின் துயரம்

பணத்தைக் கட்டாத வரை மருத்துவமனைகள் இறந்தவர்களின் உடல்களைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்க மறுக்கும் சூழலில், சாமானிய மக்கள் ஏன் இந்த அளவுக்குத் துன்பப்பட வேண்டும் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

கட்டுப்பாடற்ற விலை உயர்வு

அத்தியாவசிய பட்டியலில் உள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துகளுக்கு மட்டுமே அரசு விலை வரம்பு நிர்ணயிக்கிறது. ஆனால், சந்தையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக விற்பனையாகும் அட்ட வணைப்படுத்தப்படாத (‘நான்-ஷெடியூல்டு’) மருந்துகள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி ஆண்டுக்கு 10 சதவீத விலை உயர்வுடன் விற்கப் படுவதால், மக்கள் வீடுகளையும் நகைகளையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி, சில்லரை விற்பனை விலைக்கு மேல் 16 சதவீத லாப வரம்பை மட்டுமே அதிகபட்ச சில்லரை விலையாக (MRP) நிர்ணயிக்க ஏன் சட்டம் கொண்டு வரக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து ஒன்றிய அரசு ஆராய்ந்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *