புதுடில்லி, மே 20 நீதிபதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தன்னிச்சையாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ, பணிநீக்கம் செய்யவோ அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரி வித்துள்ளது.
பணி நீக்கம்
உத்தராகண்ட் மாநிலத்தில் பெண் நீதிபதி ஒருவர், தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமியை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப் படையில், உத்தரகண்ட் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல், அந்தப் பெண் நீதிபதியை பணிநீக்கம் செய்தும், அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். ஆனால், இந்த நடவடிக்கைக்கு அவர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெறவில்லை.
பதிவாளர் ஜெனரலின் உத்தரவை எதிர்த்து அந்தப் பெண் நீதிபதி உத்தர கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், “தலைமை நீதிபதியின் ஒப்பு தல் இன்றி பதிவாளர் ஜெனரல் பிறப் பித்த பணிநீக்க உத்தரவு செல்லாது” எனக் கூறி அதை ரத்து செய்தது.
இதனை எதிர்த்து உத்தரகண்ட் உயர் நீதிமன்ற நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் தரப்பில் எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விகள் மற்றும் கருத்துகள்.
அதிகார வரம்பு மீறல்
தலைமை நீதிபதி அல்லது நீதிபதிகள் குழுவின் ஒப்புதல் இல் லாமல், ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய பதிவாளர் ஜெனரலுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. பதிவாளர் ஜெனரல் என்பவர் தலைமை நீதிபதியின் உத்தரவைக் கேட்டுச் செயல்படக் கூடியவரே தவிர, தனித்து முடிவெடுப்பவர் அல்ல.
பெண் நீதிபதிக்கு எதிராக விசாரணை நடத்த தலைமை நீதிபதி எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், பதிவாளர் ஜெனரல் தானாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது தீவிரமானப் பிரச்சினை மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகும்.
உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்ப வில்லை எனக் கூறிய உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், அந்தப் பெண் நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட நாள் முதலே மீண்டும் பணியில் தொடர்வதாகவும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
