‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: ஆ.இராசா

1 Min Read

புதுடில்லி, ஜூலை 31- ‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசியல் நிர்ணய சபையில் பாடப்பட்டது ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 பத்திகள்தான். ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று மக்களவை தி.மு.க. உறுப்பினர் ஆ.இராசா கூறியுள்ளார்.

வந்தே மாதரம்’ பாடாவிட்டால்
தேசத் துரோகிகளா? – கனிமொழி கருணாநிதி

புதுடில்லி, ஜூலை 31-  மக்களவையில் கனிமொழி கருணாநிதி பேசுகையில் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தேசபக்தி என்பது கட்டாயத்தின் பேரில் கொண்டுவரப்பட வேண்டிய ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், “வந்தே மாதரம் பாடலை ஒருவர் பாடவில்லை என்பதற்காகவே அவரைத் தேசத் துரோகி என்று முத்திரை குத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும்? தேசபக்தியை அளவிட இத்தகைய அளவுகோல்களை நிர்ணயிப்பது ஜனநாயக முறைக்கு முற்றிலும் எதிரானது” என்று வாதிட்டார்.

மேலும், மாற்றுக் கருத்துடையவர்களை உடனே தேசத் துரோகிகள் எனக் குற்றம் சாட்டும் போக்கு அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி, உண்மையில் ஆளும் பாஜ கட்சியின் இத்தகைய பிரிவினை வாத அணுகுமுறையே நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு எதிரானது என்று சாடினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *