

தாராபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தமிழர் தலைவருக்கு தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், அந்தியூர் செல்வராஜ், பழனியப்பன், ஜெயபால், மதிவேந்தன், நாகை கவுதமன், தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர் (29.9.2026).

கோவை மாவட்ட திராவிடர் கழக தலைவர் ம.சந்திரசேகரின் 54ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காசோலை ரூ 5000 நன்கொடை வழங்கினார் (29.9.2026, தாராபுரம்)

பொள்ளாச்சி பொறியாளர் பரமசிவத்தின் 87ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். உடன் மாரிமுத்து (29.9.2026, தாராபுரம்)

கழக தொழிலாளரணி அழகப்பன், சிந்தனையாளர் பாசறை எஸ்.வி.எஸ்.சாகுல் அமீது, வழக்குரைஞர் குணசேகரன் ஆகியோர் தமிழர் தலைவரிடமிருந்து “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை (500 பிரதிகள்) பெற்றுக்கொண்டனர் (தாராபுரம், 29.9.2026)
