குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாள்

இணையவழி கையெழுத்து இயக்கம்

திரைப்படங்கள் மூலம் தந்தை பெரியாரின் பகுத்தறிவு கருத்துகளை எடுத்துக் கூறிய நகைச்சுவை வேந்தர் கலை வாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களுடைய நினைவு நாளான இன்று 30.8.2026 நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பில் உள்ள கலைவாணர் சிலைக்கு குமரி மாவட்ட மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வைத்தார். மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், நாகர்கோவில் மாநகரத் தலைவர் ச.ச.கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், கழக தோழர்கள் ஞா.பிரான்சிஸ், மு.பால்மணி, மு.குமரிச் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு கலந்து கலைவாணருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *