மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு செங்கல்பட்டு மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுராந்தகம், செப். 29- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மதுராந்தகம் நகர தி.மு.க. அலுவலகத்தில் 27.9.2026 அன்று  காலை 11  மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் அ.செம்பியன் தலைமையில், மாவட்டச் செயலாளர் ம.நரசிம்மன் வரவேற்புரைடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாவட்டச் செயலாளர் கி.இளையவேல், செங்கல்பட்டு மாவட்டக் காப்பாளர் மா.சமத்துவமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் அ.பா.கருணாகரன் மற்றும் பூ.சுந்தரம், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.அருண் குமார், மதுராந்தகம் நகர செயலாளர் ஏ. செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மறைமலை நகர் கழகத் தலைவர் திருக்குறள் வெங்கடேசன் கடவுள் மறுப்புக் கூறினார்.

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் தமது நோக்க உரையில், இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெருந்திரளானத் தோழர்கள் புடை சூழ சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளித்து, மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்களை வெற்றி பெறச் செய்ய கடுமையாகப் பிரச்சாரம் செய்வது என்று தமது கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தி.மு.க. தலைவர் தளபதி மு க ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு – திமுக வேட்பாளர் தோழர் வழக்குரைஞர் பரந்தாமன் அவர்கள் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் குழல்.லோ.குமரன், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் வி.வசந்தன், மறைமலைநகர் நகர கழகச் செயலாளர் செ.முடியரசன், மறைமலைநகர் மு.அறிவுச்சுடர், திருக்கழுக்குன்றம் சண்முகம், நெல்லுப்பட்டு இராமலிங்கம், மதுராந்தகம் சுந்தரம், துரைராஜ், பெரியார் பிஞ்சு ச.கு.மகிழ்நன் உள்ளிட்டத் தோழர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினர். மதுராந்தகம் நகர கழகத் தலைவர் பொன்.மாறன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

3.9.2026 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

1.10.2026 அன்று மதுராந்தகம் தொகுதி வையாவூர்-முசிவக்கம் பேட்டையில் தேர்தல் பரப்புரைக்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு செங்கல்பட்டில் எழுச்சிமிகு வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வழக்கறிஞர் இ. பரந்தாமன் அவர்களது வெற்றிக்கு முழு மூச்சில் பாடுபடுவது என தீர்மானிக்கப்படுகிறது

தேர்தல் பரப்புரை விளக்க துண்டறிக்கையை திராவிடர் கழகம் சார்பாகப் பரப்புவது என தீர்மானிக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *