கோவை, செப். 23- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கோவை வ.உ.சி. பூங்கா அருகில் 20.09.2026 காலை 7:30 மணியளவில் சமூக நீதி சமூகத்திற்கான நடை பயணம் மாவட்டக் கழகத் தலைவர் ம.சந்திர சேகர் தலைமையில் நடைபெற்றது.
ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதியமான் அவர்கள் பெரியார் நடை பயணத்தை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார் வ.உ.சி மைதானம் அருகில் வ.உ.சி. சிலை முன்பு தொடங்கிய பெரியார் நடை பயணம் நேரு விளையாட்டு மைதானம் அருகில் நிறைவடைந்தது.
பெரியார் நடை பயணத்தில் திராவிடர் கழக மாவட்ட மகளிரணி ப.கலைச்செல்வி, த.கவிதா, முத்துமணி, திலகமணி, செ.தனலட்சுமி, வ.ராஜேஸ்வரி, ரா.நாகமணி, யாழினி ஆகியோர் பெரியார் நடை பதாகையுடன் முன்வரிசையில் நடைபோட்டனர்.
தொடர்ந்து பொதுக் குழு உறுப்பினர் இலா.கிருஷ்ணமூர்த்தி, பொள்ளாச்சி மாவட்டக் கழகத் தலைவர் சி.மாரிமுத்து, திருப்பூர் மாவட்டச் செயலாளர் ப.குமரவேல், கோவை மாநகரத் தலைவர் தி.க.செந்தில்நாதன், மாநகரச் செயலாளர் புலியகுளம் க. வீரமணி, தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் இரா.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சா.ராசா, சிவக்குமார், வே.தமிழ்முரசு, கவுதமன், முத்துகணேசன், திருநாவுக்கரசு, வெற்றிச்செல்வன், சா.திராவிடமணி, லூக்காஸ் பீட்டர், மா. ரமேஷ், முருகானந்தம், ஆனந்த், பக அக்ரி நாகராஜ், எட்டிமடை மருதமுத்து, ஆடிட்டர் ஆனந்தராஜ், இலைக் கடை செல்வம், பெயிண்டர் குமார், காரமடை அ.மு.ராஜா, நந்தகுமார் உள்ளிட்ட இளைஞரணி மகளிரணித் தோழர்கள் அனைவரும் தந்தை பெரியார் படம், பெரியார் நடை வாசகம் பொறிக்கப்பட்ட அரைக்கை டி-சர்ட் அணிந்து அணிவகுத்து வந்தனர்.
தோழர் ஆறுச்சாமி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தோழர் ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் கொள்கை பரப்புச் செயலாளர் நாகேந்திரன், மற்றும் கோவை மாநகர தலைவர் குப்புராஜ், மாநகர நிர்வாகிகள் பிரபாகரன், சுப்பிரமணி, பரமன், செல்வம், சிவக்குமார், திலீபன், மற்றும் தமிழ்நாடு சுயமரியாதை கழகம் தலைவர் தோழர் நேருதாசு, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் மலரவன், செந்தில், மே 17 தோழர் ஜீவா, சி பி அய் எம் எல் லிபரேஷன் தோழர் பெரோஸ் பாபு, சி பி அய் எம் எல் ரெட் ஸ்டார் தோழர் லெனின், மக்கள் அதிகாரம் கழகம் தோழர் ராஜன், தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் நிர்வாகிகள் என 100 மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
நிறைவாக மாவட்ட கழகச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபா கரன் நன்றியுரையாற்றினார்.
