திருச்சி, செப்.28- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மருந்தாளுநர் நாளான 25.09.2026 அன்று கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் அனைவரும் மருந்தாளுநர் நாள் உறுதி மொழியேற்றினர். முன்னதாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை மருந்தாளுநர் நாளினை கொண்டாடும் மாணவர்கள் முதலில் மருந்தாளுநர்களின் சமுதாயக் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் மருந்தியல் துறையில் நாளுக்கு நாள் ஏற்படும் முன்னேற்றத்திற்கேற்ப தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதோடு உயிர் காக்கும் நலவாழ்வுத் துறையில் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உரையாற்றி அனைவருக்கும் உலக மருந்தாளுநர் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் முனைவர்
கோ.கிருஷ்ணமூர்த்தி உறுதி மொழியை வாசிக்க பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதி மொழியை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
