‘எல் நினோ’வின் தாக்கத்தால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஆய்வறிக்கையில் தகவல்

சிகாகோ, செப்.27 ‘சூப்பர் எல் நினோ’வால் அடுத்த 6 மாதங்களில் உலகம் முழுவதும் 4.5 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் எல் நினோ தாக்கத்தால் உலகள வில் கடுமையான வறட்சி, வெப்பநிலை உயர்வு மற்றும் அசாதாரண பருவமழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ஆய்வு செய்துள்ள கிளைமேட் இம்பாக்ட் லேப் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில், சூப்பர் எல் நினோவால் செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையிலான காலகட்டத்தில் ஏற்படவுள்ள கடும் வெப்பத்தால் சுமார் 4,51,000-க்கும் மேல் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஏற்படும் வெப்பம் தொடர்பாக உயிரிழப்புகளில் பெரும் பான்மையானவை தென்பகுதியில் உள்ள நாடுகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயங்கும் கிளைமேட் இம்பாக்ட் லேப் என்பது காலநிலை மாற்றம் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்றவை உலகெங்கிலும் உள்ள மக்கள், பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் ஆராய்ச்சிக் கூட்டமைப்பாகும்.

இந்த ஆய்வு குறித்து கிளைமேட் இம்பாக்ட் லேப்பின் இணை நிறுவநர் மைக்கேல் கிரீன்ஸ்டோன் தெரிவித்ததாவது:

“எல் நினோ காரணமாக வரும் மாதங்களில் 4,51,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது நம்மை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இதில், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அடங்குவர்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆய்வறிக்கையின்படி, அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதியாக சஹேல் பிராந்தியம் உள்ளது. இந்த பகுதியில் உயிரிழப்பு எண்ணிக்கை 66,800-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் நைஜீரியாவில் 31,400, சூடானில் 17,500, நைஜரில் 10,000 மற்றும் சாட் நாட்டில் 8,000 உயிரிழப்புகள் அடங்கும்.

தென்கிழக்கு ஆசியாவைப் பொறுத்த வரை, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் இணைந்து 19,400 கூடுதல் உயிரிழப்புகளைச் சந்திக்கக்கூடும். அதேவேளையில் இந்தோ னேசியாவில் 19,300 உயிரிழப்புகள் பதிவாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் அடுத்த பிப்ரவரி மாதத்துக்குள் 15,800 பேர் வெப்பம் சார்ந்த பிரச்சினைகளால் உயிரிழக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்ச்சியூட்டும் மய்யங்கள், நீர்ச் சத்து வசதிகள், திறந்தவெளியில் பணி யாற்றுவோருக்கான பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மதிப்பீடுகள் அரசாங் களுக்கு உதவும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *