தீவிரவாதத்தை எதிர்ப்பதாக நடித்தார் முஷாரப் அமெரிக்க உளவுத்துறை மேனாள் அதிகாரி தகவல்

2 Min Read

வாசிங்டன், அக்.26- பாகிஸ்​தான் மேனாள் அதிபர் பர்​வேஸ் முஷாரபை பெரும் தொகை கொடுத்து வாங்​கினோம் என்று அமெரிக்க உளவுத் துறை மேனாள் அதி​காரி ஜான் கிரி​யாகோ தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்க உளவு அமைப்​பான சிஅய்ஏ-​வின் மேனாள் அதி​காரி​யான அவர், இந்​திய செய்தி நிறு​வனத்​துக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாகிஸ்​தான் அரசுடனான அமெரிக்​கா​வின் உறவு மிக​வும் சிறப்​பாக உள்ளது. குறிப்​பாக அந்த நாட்​டின் மேனாள் அதிபர் பர்​வேஸ் முஷாரப் ஆட்​சிக் காலத்​தில் இரு நாடு​கள் இடையி​லான உறவு மிக​வும் வலு​வாக இருந்​தது.

சர்​வா​தி​காரிகளுடன் இணைந்து பணி​யாற்​று​வதை அமெரிக்கா விரும்​பு​கிறது. பொது​வாக சர்​வா​தி​காரி​கள் மக்​களின் கருத்​துகள், ஊடகங்​களின் செய்​தி​கள் குறித்து துளி​யும் கவலைப்​படு​வது கிடை​யாது. அந்த வகை​யில் பாகிஸ்​தான் மேனாள் அதிபர் முஷாரபுடன் அமெரிக்கா நெருங்கி பணி​யாற்​றியது.

பொருளா​தார வளர்ச்​சி, தீவிர​வாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு கோடிக்​கணக்​கான ரூபாயை வாரி​ இறைத்​தோம். இந்த பெரும் தொகை மூலம் முஷாரபை விலைக்கு வாங்​கினோம். அவர் ஆட்​சி​யில் இருந்​த​போது ஒரு வாரத்​தில் பலமுறை சிஅய்ஏ அதி​காரி​கள் சந்​தித்​துப் பேசுவது வழக்​கம். அமெரிக்கா என்ன சொன்​னாலும் அதை முஷாரப் அப்​படியே செயல்​படுத்​து​வார்.

பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு தேவை​யான வசதி​களை செய்து கொடுத்து அவர்​களை முஷாரப் மகிழ்ச்​சி​யாக வைத்திருந்தார். தீவிர​வாதத்​துக்கு எதி​ரான போரில் அமெரிக்கா​வுடன் இணைந்து பணி​யாற்​று​வ​தாக அவர் நடித்து வந்​தார். உண்​மை​யில் அவர், இந்​தி​யா​வில் தீவிர​வாதத் தாக்​குதல்​களை நடத்​து​வ​தில் தீவிர​மாக இருந்​தார்.

அல்- கயிதா தீவிர​வா​தி​களை அழிக்​கவே பாகிஸ்​தானுக்கு தாராள​மாக நிதி​யுதவி வழங்​கினோம். ஆனால் பாகிஸ்​தான் ராணுவம் அல்-கயி​தாவை அழிப்​ப​தில் கவனம் செலுத்​த​வில்​லை. இந்​தி​யா​வில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படு​வது குறித்து மட்​டுமே முஷாரபும் பாகிஸ்​தான் ராணுவ​மும் தீவிர கவனம் செலுத்​தின.

ஊழல் வழக்​கு​களில் சிக்​கிய பாகிஸ்​தான் மேனாள் அதிபர் பெனாசீர் புட்டோ கடந்த 2000ஆம் ஆண்​டில் சொந்த நாட்டை விட்டு வெளி​யேறி துபா​யில் வசித்​தார். அங்கு அவர் மிக​வும் ஆடம்​பர​மாக வாழ்ந்​தார். ஆனால் பாகிஸ்​தான் மக்​கள் மிகுந்த ஏழ்​மை​யில் வாடினர். இது​தான் பாகிஸ்​தானின் உண்மை முகம் ஆகும்.

இவ்​வாறு அவர் தெரிவித்​துள்​ளார்​.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *