தேர்தல் பரப்புரைக்கு செப். 29இல் தாராபுரம் வருகை தரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு தாராபுரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடலில் முடிவு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தாராபுரம், செப். 27- தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பரப்புரைக்கு  நாளை மறுநாள் (29.9.2026)தாராபுரம் வருகை தரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நேற்று (26.09.2026) காலை 10.30 மணியளவில் தாராபுரம்  பேருந்து நிலையம் எதிரே கதம்பம் அரங்கத்தில் தாராபுரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினார்.

மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த. சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட தலைவர் க.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.

பொதுக்குழு உறுப்பினர் நா. சக்திவேல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட காப்பாளர் கே.என். புள்ளியான், பொதுக்குழு உறுப்பினர் கி.மயில்சாமி, திருப்பூர் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் பல்லடம் இளங்கோவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பு.முருகேசன், நகர செயலாளர் முகமது சித்திக், உடுமலை நகர செயலாளர் முருகேசன், நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் மு.மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் கு.கோடிசுவரன், ப.க. து.முருகேசன், கனியூர் பழ.பெரியசாமி, மா.இராமசாமி, கு.ராதாகிருஷ்ணன், க.அர் ஜுனன், த.நாகராஜ், கடத்தூர் அமைப்பாளர் மனோகரன், ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். மாவட்ட துணை செயலாளர் நா.மாயவன் நன்றி கூறினார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டி யிடும் திமுக வெற்றி வேட் பாளர் வழக்குரைஞர் எஸ்.சுகன்யா வெற்றி வாகை சூடுவதற்கு திராவிடர் கழகம் முழு ஒத்துழைப்பு அளிப்பது வெற்றியடைய செய்யவைப்பது  எனவும்,

வேட்பாளர் வழக்குரைஞர் எஸ்.சுகன்யாவை ஆதரித்து 29.09.2026 அன்று மாலை 05.00 மணிக்கு வடுகப்பட்டி பிரிவு மூலனூரிலும், இரவு 07.00 மணிக்கு தாராபுரம் அண்ணா சிலை அருகில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உதய சூரியன் சின்னத்திற்கு தேர்தல் பரப்புரை செய்து கூட்டத்தில் வாக்குகள் சேகரிக்க  உள்ளார்.

தாராபுரம் கழக மாவட்டத் திற்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு உற்சாகமான வரவேற்பளிப்பது எனவும், அருகில் உள்ள அனைத்து மாவட்ட கழகத் தோழர்களையும் பங்கேற்க வைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *