‘நீட்’ தேர்வையும் EWS இடஒதுக்கீட்டையும் ரத்து செய்ய வலியுறுத்தி இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடத்திட அரியலூர் மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

அரியலூர் ஜூலை 28- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.7.2026 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. அரியலூர் செந்துறை சாலை கோவை கிருஷ்ணா சிற்றரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்க, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, பேராசிரியர் இ.வளனறிவு, பொதுக்குழு உறுப்பினர் இரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் க.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன் வரவேற் புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் கூட்டத் தின் நோக்கங்களை விளக்கி உரையாற்ற கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் சேலம் பொதுக் குழுவின் சிறப்புகளையும் அதன் சிறப்பான தீர்மானங் களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தேர்தலுக்குப் பிறகு இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் எஸ்.எஸ்.திராவிடச்செல்வன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

மணப்பத்தூர் பெரியார் பெருந் தொண்டர் கலைமணியின் வாழ்விணையரும் அரியலூர் மாவட்ட மகளிரணி தலைவராக தொண்டாற்றிய அம்மையார் ஜோதிமணி அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழுவின் சிறப்பு வாய்ந்த தீர்மானங்களை ஏற்று அவற்றை சிறப்பாக செயல்படுத்திடுவதென ஒரு மனதாக தீர்மானிக்கப்படுகிறது.

நீட் தேர்வையும் EWS இட ஒதுக்கீட்டை யும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி திராவிடர் மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் அரியலூர் மாவட்டத்திற்கு 1.8.2026 சனிக்கிழமை திருமழபாடி கீழப்பழுவூர் அரியலூர் செந்துறை ஆகிய ஊர்களின் வழியாக வருகை தர இருக்கிறது. பயணக் குழுவிற்கு உற்சாக வரவேற்பளிப்பதெனவும் பயணத்தில் இரு சக்கர வாகனங்களுடன் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திடுவதெனவும் ஒருமனதாக முடிவு செய்யப்படுகிறது

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட இளைஞரணி தலைவர்: லெ.தமிழரசன், செயலாளர்: ப.மதியழகன், துணைத் தலைவர்: க.செந்தில், துணை செயலாளர்: சே. பிரபாகரன், மாவட்ட மகளிர் அணி தலைவர் செ.பரமேஸ்வரி, செயலாளர் செ. ராதிகா, ஜெயங்கொண்டம் ஒன்றியம் தலைவர் கா. பெரியார் செல்வன்.

பங்கேற்றோர்

அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து ப.க.மாவட்ட தலைவர், பெ நடராஜன், சிவசக்தி செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ் செல்வன் மாவட்ட விவசாய அணி செயலாளர்
ஆ.இளவழகன் கீழப்பழுவூர், கே.எம்.அன்பரசன் திருமானூர் ஒன்றிய தலைவர்க. சிற்றரசு ஒன்றிய செயலாளர் பெ.கோபிநாதன், நகர தலைவர் சு.சேகர் ஆண்டிமடம், மு.அறிவின் அரியலூர்அரங்கநாடன், வெங்கட கிருஷ்ணாபுரம் மு.மருதமுத்து, ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளர், கோ.பச்சமுத்து, பூ கலைமணி, ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே.அண்ணாமலை, அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மு.ராஜா செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா செல்வகுமார் தஞ்சாவூர், வெ. துரை அருள்மணி ஆண்டிமடம் ஒன்றிய தலைவர், தியாக. முருகன் அரியலூர் நகர செயலாளர் ஆட்டோ தர்மா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *