சென்னை, செப்.26- ‘வைப்பு நிதி உங்கள் அருகாமையில்’ என்ற தலைப்பிலான குறைதீர்க்கும் முகாம் வருகிற 28ஆம் தேதி (திங்கட்கிழமை) சென்னை கீழ்ப்பாக்கம் தவுலத் டவர்ஸ் 7ஆவது மாடியில் உள்ள எக்ஸ்.பி.பி. ஆசியா அலுவலகத்தில் நடைபெறும். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் உள்பட வைப்பு நிதி தொடர்புடையவர்கள் தகுந்த ஆவணங்களுடன் நேரில் வந்து தங்களுடைய கோரிக்கைகளை, குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு மண்டல வைப்பு நிதி ஆணையர் ரேணு ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இதேபோல சென்னை வடக்கு மண்டல வைப்பு நிதி அலுவலகம் சார்பில், சென்னை மூலக்கடையில் உள்ள ஈ.எஸ்.அய். கிளை அலுவலகத்தில் வருகிற 28.9.2026 அன்று வைப்பு நிதி உங்கள் அருகாமையில் என்ற தலைப்பிலான குறைதீர்க்கும் முகாம் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையர் நிஷா ஒவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
