குழந்தைகள் ஆபாசப் படங்களைத் தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம் கேள்வி

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி செப். 25- சமூக வலைதளங்களில் குழந்தை களுக்கு எதிரான ஆபாசப் படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

சமூக ஊடகங்களில் சிறார்கள் தொடர்பான பாலியல் அத்துமீறியத் தகவல்கள், ஆபாசப் படங்கள் பரப்பப்படுவதைத் தடுக்கக் கோரி, ‘ஜஸ்ட் ரைட்ஸ் பார் சில்ரன் அலையன்ஸ்’ அமைப்பு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி. பார்திவாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே, இவ்வழக்கில் கடந்த ஆக.14-ம் தேதியே ஒன்றிய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சட்ட அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுட்டும், இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படாததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அப்போது, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், “இன்ஸ்டாகிராம் தளத்தில் சிறுவர் பாலியல் சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்தி, டெலிகிராம் சேனல்கள் மூலம் பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்யும் அதிர்ச்சித் தகவல் பன்னாட்டு ஊடக விசாரணையில் வெளிவந்துள்ளது” என்றார்.

கடந்த 2024 செப்டம்பர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி, இத்தகைய குற்றங்கள் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் உள்ளூர் காவல்துறையிடம் புகாரளிக்க வேண்டும். ஆனால், மெட்டா போன்ற நிறுவனங்கள் இந்திய சட்டப் பிரிவுகளுக்குத் தெரிவிக்காமல் அமெரிக்க மய்யங்களுக்கு மட்டுமே புகாரளிக்கின்றன” என குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், “ஒன்றிய அரசு இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகவே எடுத்துள்ளது. விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு அறிவிக்கை அனுப்பி சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், “இது மிகவும் தீவிரமான பிரச்சினை. ஆனால், ஒன்றிய அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படாதது தவறானது” என்றனர். மேலும், இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இறுதிவாய்ப்பு வழங்கி கெடு விதித்து, வழக்கின் விசாரணையை அக்.15-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *