திருவள்ளூர், செப். 25- திருவள்ளூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவ மனையில் நோயாளிக்கு குளுக்கோஸ் பாட்டிலில் கழிவறை தண்ணீரை அடைத்து சிகிச்சை அளித்துள்ள கொடூரம் அரங்கேறி உள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் நேற்றிரவு (24.9.2026) குடும்பத் தகராறு காரணமாக தனது வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை சாப்பிட்டு மயக்கம் அடைந்தார். உடனே அவரை பெரியபாளையம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.இந்தநிலையில் அவருக்கு மூக்கில் டியூப் வைத்து குளுக்கோஸ் பாட்டிலில் சோடியம் குளோரைடுக்கு பதிலாக மருத்துவமனை கழிவறையில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துவந்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றி சிகிச்சை அளித்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நோயாளிகளுக்கு சோடியம் குளோரைடுக்கு பதிலாக குளுக்கோஸ் பாட்டிலை பயன்படுத்தி உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற் றுவது வழக்கம். ஆனால் மருத்துவர்கள், செவி லியர்கள் ஆகியோரின் அலட்சிய போக்கு காரணமாக தூய்மை பணி யாளர்கள் மருத்துவமனை கழிவறையில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றியுள்ளனர்.இதுபற்றி லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் காணொலி எடுத்து கேட்டபோது, ‘’இப்படித் தான் நடக்கும்’ என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதனால் வேதனை அடைந்த லோகேஷ் கையில் நீர் நிரப்பிய பாட்டிலுடன் மருத்துவர், செவிலியர்களை தேடி அலைந்துள்ளார். ஆனால் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலி யர்கள் யாரும் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருந்ததால் அவர் மேலும் வேதனை அடைந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை யினர் தகவல் தெரிவித்து பின்பு தனியார் மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. இதனிடையே, நேற்றிரவு பணியில் இருந்த மருத்துவர் முனிரத்தினம், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘’மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கள், செவிலியர்கள் யாரும் தனது பெயர் கொண்ட பேட்ஜை அணிவதில்லை. மருத்துவர்கள் பெயர் கேட்டால்கூட தெரிவிப்பது கிடையாது’ என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பணியில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் ஆகியோரின் பெயர் பொறித்த பேட்ஜ் அணிந்து பணி செய்ய வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
