சென்னை, செப்.25 இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஅய்அய்) கல்வி தொழில்நுட்பவியல் குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் நேற்று நடைபெற்றது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், ‘‘பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் நியமனங்கள் கலந்தாய்வு முறையில் வெளிப் படையாக மேற்கொள்ளப் பட்டுள்ளது. தற்போது முதல்முறை யாக 112 2ஆம் நிலை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் நிலை முதல்வர்கள் 25 பேரில் 10 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள 15 பேர் பின்னர் நியமிக்கப் பட உள்ளனர்.
துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்களில், கன்வீனர் கமிட்டி மூலம் இடைக்கால நிர்வாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்வீனர் கமிட்டி மூலம் 11 பல்கலைக் கழகங்களில் பொறுப்பு துணை வேந்தர்கள் நியமனம் செய்யப் பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
