ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் அடாவடி!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிரான ‘நக்சலைட்’ கருத்துக்கு
மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் கடும் கண்டனம்

புதுடில்லி, செப்.25 தேசியப் பாடலான வந்தேமாதரத்தின் 6 சரணங்களையும் பாடுவதைக் கட்டாயமாக்கும் தண்டனைச் சட்டத்தை எதிர்த்துக் கர்நாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தாக்கல் செய்தமனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், பாடலை முழு மையாகப் பாடாதவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடுக்கக் கூடாது என நேற்று முன்தினம் (23.9.2026) உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் போது, ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராகத் தெரிவித்த ‘நக்சலைட்’ கருத்துக்கு மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (PUCL) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மனித உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “டி.எம்.கிருஷ்ணாவிற்காக ஆஜ ரான மூத்த வழக்குரைஞர் எஸ்.முரளிதர், இந்தச் சட்டத்திருத்தம் அவசர அவசரமாகியும், போதிய ஆலோசனைகள் இன்றியும் நிறைவேற்றப்பட்டது’’ என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இந்த வாதத்திற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘சட்டம் இயற்றுவது அரசி யலமைப்பின்படி நடக்கும்; சட்டம் இயற்றுவது நக்சலைட்டுகளின் எண்ணப்படி இருக்க முடியாது’ என்று கூறினார். வழக்குரைஞர் முரளிதர் இந்த வார்த்தைப் பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும்எனக் கோரினார். இருப்பினும், சொலிசிட்டர் ஜெனரல் அந்தக் கருத்தைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார்.ஆனாலும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, ‘ஒருவரை நீங்கள் நக்சலைட் என்று முத்திரை குத்தினாலும்கூட, அவர் தனது அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை இழந்துவிட மாட்டார்’ என்று பதிலடி கொடுத்தார்.

அரசு வழக்குரைஞருக்குச் சிறிதும் அழகல்ல!

ஒன்றிய அரசின் உயரிய சட்ட அதிகாரியான சொலிசிட்டரின் இத்தகைய வாதங்கள் ஓர் அரசு வழக்குரைஞருக்குச் சிறிதும் அழகல்ல; இதுவாதங்களின் தரத்தையும், இந்நாட்டின் உயர்ந்த நீதிமன்றத்தின் கண்ணியத்தையும் குறைக்கிறது. அதனால், நீதிமன்றக் கண்ணியத்தைப் பேண வேண்டும். அரசியல் முத்திரைகளைக் குத்து வதையோ, பெயர் சொல்லி அசிங்கப்படுத்துவதையோ விடுத்து அரசியலமைப்புச் சட்ட விதிகளின் அடிப்படையில் வாதங்களை வைக்கவேண்டும் என மனித உரி மைகளுக்கான மக்கள்ஒன்றியம் கோருகிறது.

பேச்சுரிமையை அச்சுறுத்த  செய்யப்படும் முயற்சி!

மேலும், மாற்றுக் கருத்துகள், விமர்சனங்கள் அல்லது சட்டப் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும், அரசின் நிலையை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் கருத்துகளை ‘நக்சலைட்’ என்று விவரிப்பது ஒன்றிய அரசின் வாடிக்கையான வாதமாக மாறிவிட்டது. இந்தியாவின் அடிப்படைச் சித்தாந்தத்தில் இவ்வளவு ஆழமான நம்பிக்கை கொண்ட ஒருவரை நக்சலைட் என முத்திரை குத்துவது, அரசி யலமைப்புச் சட்டம் வழங்கும் பேச்சுரிமையை அச்சுறுத்தவும் மவுனமாக்கவும் செய்யப்படும் முயற்சியைத் தவிர வேறில்லை” என அந்த அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *