பிரியங்கா காந்தி
வயநாடு, செப். 24- பெண் களுக்கு எதிரான வன்முறை நிகழ் வுகள் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் பெரிய திட்டங்களைப் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான பிரி யங்கா காந்தி, கல்பெட்டாவில் உள்ள வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்து, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட் டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, பீகாரின் ஜமுய் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது குறித்து செய் தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “இது மிகவும் மோசமான ஒன்று. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. கடந்த காலங் களிலும் பெண்களுக்கு பாதுகாப் பற்ற நிலை இருந்தபோதிலும், முன்பைவிட தற்போது நிலைமை மோசமாகி உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் மேலும் அதிகரித்துள்ளன. தெருக்களில் கூட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடி யாத நிலையில், பெரிய திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும் பேசுவதில் அர்த்தம் இல்லை.
இது குறித்து நாம் அனைவருமே சிந்திக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக உணர்வதை எவ் வாறு உறுதி செய்வது என்பது குறித்து மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் சிந்திக்க வேண்டும்.” என தெரிவித்தார்.
