டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக 2 தேர்தல் ஆணையர்கள் போர்க்கொடி; 14 முறை எதிர்ப்பு தெரிவித்தும் எஸ்அய்ஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக குற்றச்சாட்டு. தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமாரும், தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் பதவி வகித்து வருகின்றனர்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கத்துக்கு காரணமான ஞானேஷ்குமாரை பதவி நீக்க எதிர்க் கட்சிகள் வலியுறுத்தல். ஞானேஷ்குமார் விவகாரம் தொடர்பாக விவாதிக்க இந்தியா கூட்டணி விரைவில் கூடுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும்; அண்மைக்கால தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும்” – அரவிந்த் கெஜ்ரிவால். இந்திய தேர்தல் ஆணையத்தை ஞானேஷ் குமார் தனது விருப்பப்படி தனியாக நடத்தி வந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மத்தியப் பிரதேசத்தில் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, தேர்வானவர்களுக்கு பணி வழங்க வேண்டும் – முதலமைச்சர் மோகனுக்கு ராகுல் காந்தி கடிதம்.
தி இந்து:
* “எஸ்.அய்.ஆர் சட்டவிரோதமானது; அதைத் திரும்பப் பெற வேண்டும்” – முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி. வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) சட்டவிரோதமானது என்றும், அதைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்தார்.
தி டெலிகிராப்:
* “வெற்றி பெற்ற அணியின் கேப்டனே நடுவரைத் தேர்வு செய்வது போன்றது” – தேர்தல் ஆணையர் தேர்வில் அரசின் ‘வீட்டோ’ அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கவலை. தேர்வுக் குழு செயல்பட்டால், அதன் முடிவு காகிதத்தில் 2:1 என்ற விகிதத்தில் நிர்வாகத்திற்கும், நடைமுறையில் ஆளும் கட்சிக்கும் சாதகமாக அமையும் என நீதிபதி தத்தா தெரிவித்தார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்கு ஒத்து ஊதுகிற பணியை நீதித்துறை செய்கிறது, நீதிபதி தீபங்கர் தத்தா. “நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கிறார்கள்” என்ற கருத்தை மறுத்த நீதிபதி தீபங்கர் தத்தா, உண்மையில் நீதிபதிகள் நியமனத்தில் அரசின் பங்கு முக்கியமானது என்றும், நீதித்துறை அரசுக்கு அடுத்த நிலையில் செயல்படுகிறது என்றும் கூறினார்.
– குடந்தை கருணா
