டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேற்கு வங்கத்தில் ஜாதவ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சியை தொடர்ந்து, பிற பல்கலைக்கழக, கல்லூரிகளிலும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடத்த முயற்சி.
தி இந்து:
* காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி (UDF) அரசாங்கத்தின் 20 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை பட்டியலை முதலமைச்சர் வி.டி.சதீசன் வெளியிட்டார். கேரள அமைச்சரவை இன்று பதவியேற்கிறது
* நீட் வினாத்தாள் சர்ச்சை: கல்வி அமைச்சருக்கு எதிராக காங்கிரசின் எதிர்ப்பு தீவிரம். ”இந்தியாவின் அனைத்து வயதுப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களையும் ஒரே நேரத்தில் தோல்வி அடையச் செய்துள்ளார் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,” என ராகுல் விமர்சனம்.
தி டெலிகிராப்:
*கங்கை நதியில் அசைவக் கழிவுகளை வீசுவது மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடும்: அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்ச் 15 அன்று கங்கை நதியில் ஒரு படகில் இருந்தவாறே தங்கள் ரமலான் நோன்பை முடித்து, இறைச்சி உண்டுவிட்டு, அதன் மீதங்களை அந்த புனித நதியில் வீசியுள்ளனர்.
* உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை 37-ஆக உயர்த்தினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* இந்தியத் தொல்லியல் துறையால் (‘ASI) பாதுகாக்கப் படும் நினைவுச் சின்னம் வழிபாட்டுத் தலம் ஆகாது’: போஜசாலா குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு ‘தெளிவற்றது’ என்று காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் விமர்சனம்
– குடந்தை கருணா
