இதுதான் பாசிசம் ‘வந்தே மாதரம்’ பாடலைத் தடுத்தால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை புதிய மசோதாவைக் கொண்டு வருகிறது ஒன்றிய அரசு

புதுடில்லி, ஜூலை 18- ‘வந்தே மாதரம்’ பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில், புதிய மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு தாக்கல் செய்கிறது. ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை குறிக்கும் வகையில், கடந்த ஜனவரியில், அரசு நிகழ்ச்சிகளில் அப்பாடலை பாட வேண்டும் என, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. தற்போது நாளை மறுநாள் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவை தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு இடையூறு விளைவித்தாலோ அல்லது அவமரியாதை செய்தாலோ, அல்லது அதை பாட மறுத்தாலோ அல்லது முழுமையாக பாட மறுத்து சில பகுதிகளை நீக்கி, சில வரிகளை மட்டும் பாடினாலோ, அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *