‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாகப் பாடாதவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 24- மதநம்பிக்கை அடிப்படையில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடாதவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலை அவமதித்தால் தண்டனை விதிக்கும் சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாடுவதை வேண்டுமென்றே பாடுவதை தடுத்தாலோ அல்லது அதைப்பாடும் கூட்டத்திற்கு இடையூறு விளைவித்தாலோ அது சட்டப்படி குற்றமாகும். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மேற்கண்ட புதிய சட்டத்திற்கு எதிராக கருநாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்‌ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் நேற்று முன்தினம் (22.9.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எஸ்.முரளீதர், ‘‘புதியதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் தேசியப் பாடலை அவமதித்தால் தண்டனை விதிக்க வழி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 80 ஆண்டுகளாக மக்களால் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடலின் அமைப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதை மீறினால் அதற்கான தண்டனை மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் இதுபோன்ற சட்டங்களை இயற்றக் கூடாது. இது அரசியல் அமைப்புக்கு எதிரானதாகும். எனவே இந்த விவகாரத்தில் மக்களின் கருத்துகளை கேட்டு சட்டம் இயற்றுவது தான் சரியான ஜனநாயக அணுகுமுறையாக இருக்கும். அதைத் தவிர்த்து இந்த பாடலை கட்டாயமாக்கும் சட்டத்திருத்தம் என்பது தன்னிச்சையானதாக உள்ளது. அதேபோன்று வந்தே மாதரம் பாடலில் கடைசி நான்கு சரணங்கள் இந்து மத கடவுள்களை போற்றும்விதமாக, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மீறுவதாக உள்ளது என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘வந்தே மாதரம் பாடல் புதிய சட்டம் தொடர்பான விவகாரத்தில் நக்சல்கள் விரும்பும் வகையில் சட்டமியற்ற முடியாது. அதற்கு நாடாளுமன்றம் தான் அரசியலமைப்புக்கு பாதுகாப்பு. ஆனால் நாடாளுமன்ற அமைப்பை நக்சல்கள் விரும்புவது கிடையாது என்று தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

குறிப்பாக வந்தே மாதரம் பாடலின் புதிய சட்டம் மற்றும் தண்டனை ஆகியவைக்கு எதிராக கேள்வி யெழுப்பினால் அவர்களை நக்சல்கள் என்று பேசுவதா? இதனை கண்டிப்பாக ஏற்க முடியாது. எனவே அந்த வார்த்தையை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஆனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அதனை நிராகரித்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அறையில் சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து இருக்கும் சூழலை சரிசெய்யும் விதமாக இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‘‘வந்தே மாதரம்தான் தேசிய பாடல் என்பதில் எந்தவித சர்ச்சையும் இல்லை. குறிப்பாக வந்தே மாதரம் பாடலை மத நம்பிக்கை காரணமாக முழுமையாக பாடவில்லை என்றாலும், அப்படிபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை உட்பட எதனையும் எடுக்கக் கூடாது. ஏனெனில் அதற்கான அவசியம் இல்லை. இதில் குறிப்பாக தேசியப் பாடல் எது என்பதை உறுதி செய்ய நீதிமன்றத்திற்கு அதிகார வரம்புகள் எதுவும் கிடையாது. ஆனால் மறுஆய்வு செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று அறிவிக்கை பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *