புதிய தலைமைச் செயலகம் கட்டத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் மனு!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி, செப். 23-  சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை யொட்டிய பகுதியில் தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வழக்குரைஞர் ஜெய்சுகின் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையை யொட்டி 25 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு 10.98 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தற்போது பொருளாதார வளர்ச்சி இல்லாத சூழலில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பிரச்சினைகள் இருக்கும்போதும் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது மாநிலத்தின் நிதி நிலையைக் கடுமையாகப் பாதிப்பதோடு, தமிழ்நாடு மீண்டும் மீண்டும் கடனில் மூழ்கும் சூழலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தலைமைச் செயலகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பகுதி அரிய வகை ஆமைகள் வழக்கமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல பகுதியாகும். இத்தகைய மண்டலத்தில் பிரமாண்டமான கான்க்ரீட் கட்டுமானங்களை மேற்கொள்வது கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தை மிக மோசமாகப் பாதிக்கும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல, பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதி மீனவர்கள் அதிகமாக வாழும் இடமாகும், அப்பகுதியில் தான் அவர்களின் வாழ்வாதாரமும் உள்ளது. இந்த சூழலில் பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது மீனவர்களை கடுமையாக பாதிக்கும். ஏற்கெனவே புதிய தலைமைச் செயலகம் கட்டு வதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பட்டினப்பாக்கம் மற்றும் சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் நிதி நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற் கான அரசாணையை முற்றிலும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *