வடக்கிலும் எதிரொலித்த கொலீஜியம் எதிர்ப்பு அலகாபாத் உயர் நீதிமன்றம் முன் தீர்ப்பு நகல்களை எரித்து வழக்குரைஞர் அதிரடிப் போராட்டம்!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அலகாபாத், செப்.23 நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் ‘கொலீஜியம்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அலஹாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தின் முன் வழக்குரைஞர் பிரபல் பிரதாப் சிங் நீதிமன்ற உத்தரவுகளின் நகல்களைத் தீயிட்டுக் கொளுத்திப் போராட்டம் நடத்திய நிகழ்வு நீதித்துறை மற்றும் வழக்குரைஞர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட பல் வேறு சமூகநீதித் தலைவர்கள் கொலீஜியம் முறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தற்போது வடமாநிலங்களி லும் இக்கோரிக்கை வலுக்கத் தொடங் கியுள்ளது.

உயர் நீதிமன்ற வளாகத்தின் முன்பாகவே நீதிபதி நியமன முறையை எதிர்த்து, ஒரு வழக்குரைஞர் இத்தகைய தீவிரமான முறையில் உத்தரவு நகல்களை எரித்துப் போராட்டம் நடத்தியிருப்பது நீதித்துறை வரலாற்றிலே குறிப்பிடத்தக்கது. கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை முற்றிலுமாக இல்லை என்றும், அதில் உடனடியாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியே அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சமூக நீதி கேள்விகுறியாகிறதா?

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி நிலைநாட்டப்படுகிறதா என்ற கேள்வி மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அண்மையில் நீதிபதி தீபக்குப்தா அவர்கள், “நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படுவதில்லை; குறிப்பிட்ட ஜாதியினரே அதிக அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி யிருந்தார்.

கொலீஜியம் முறை ஜனநாயகப் பண்புகளுக்கு எதிராகவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கான பிரதிநிதித்துவத்தைப் பறிப்பதாகவும் பலரும்  சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தற்போது உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வெடித்துள்ள இப்போராட்டம், கொலீஜியம் முறைக்கு எதிரான கோரிக்கை இந்தியா முழுவதும் பரவி வருவதையும், நீதித்துறையில் சமூக நீதியை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *