ஒற்றைப் பத்தி

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

‘கோயில் பிசினஸ்’

‘‘அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குப் பக்தர்களால் நேர்த்திக் கடனாக வேட்டி, துண்டு, புடவை, பரிவட்டம், குடம், விளக்கு, தாம்பூலம், மணி, தட்டு உட்பட பித்தளை மற்றும் சில்வர் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முறையாக ரசீது வழங்கப்பட வேண்டும். பெரும்பாலான கோயில்களில் வழங்கப்படுவதில்லை.

உபயமாக வழங்கப்படும் வேட்டி, புடவை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்குச் செல்கின்றன.

எந்த நோக்கத்துக்காக பக்தர்கள் உபயப் பொருட்களை வழங்குகிறார்களோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது.

சிறிய கோயில்களுக்கு பூஜைப் பொருட்கள் வழங்குவதற்காகவே ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் அறநிலையத்துறையால் செலவிடப்படுகிறது.’’

இவ்வளவுத் தகவல்களையும் கூறியிருப்பது கருப்புச் சட்டைக் காரர் அல்லர்; கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநிலத் தலைவர் வாசு என்பவர்தான் கூறியிருக்கிறார்.

செய்தி வெளியிட்டதும் ‘விடுதலை’ ஏடு அல்ல! சாட்சாத் அக்கிரகார அம்மாஞ்சி ஏடான ‘தினமலரே’ வெளியிட்டுள்ளது.

(‘தினமலர்’ 20.9.2026 பக்கம்

5 – பத்தி 6,7,8)

ஏதோ கோயில், அங்கு கடவுள், அதற்குச் சக்தியுண்டு; கேட்ட வரம் கொடுப்பார் அவர்! அவருக்கு நேர்த்திக் கடன் கழிக்க வேண்டும், காணிக்கைகள் அளிக்க வேண்டும் என்றெல்லாம் தடபுடலாகப் பிரச்சாரம் செய்கிறார்களே – அதன் யோக்கியதை என்னவென்று இப்பொழுது புரிகிறதா?

சாமிக்குக் காணிக்கை செலுத்தும் பொருட்களையே வெளியில் விலைக்கு விற்று விடுகின்றனர் என்றால், இது வியாபாரம் (கோயில் பிசினஸ்) அல்லாமல் வேறு என்ன?

1976 மே திங்கள் 5ஆம் தேதி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத் தின்போது காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார் தெரியுமா?

‘‘மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது  அதிகப் பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷ னாகக் கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலோரிடம் ‘வர்த்தக மனப்பான்மை’ காணப்படுகிறது’’ என்று பேசியதை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது.

கோயில் சாமிக்குக் காணிக்கையாக, நேர்த்திக் கடனாகப் பக்தர்கள் அளிக்கும் பொருட்களும் கள்ள மார்க் கெட்டில் விற்கப்படுவதாக பூசாரிகள் நலச் சங்க தலைவர் கூறுவதும், அதைத் ‘தினமலரே’ செய்தியாக வெளியிடுவதும் எதைக் காட்டுகிறது? புரிந்து கொள்வீர்!

         –  மயிலாடன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *